பாராலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ப்ரீத்திபால் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், பாராலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் 14.21 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்திய வீராங்கனை ப்ரீத்திபால் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனைகள் சியா 13.58 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கமும், குவோ 13.74 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
ஏற்கனவே துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லேகரா தங்கப் பதக்கமும் மோனா அகர்வால் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.