games

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ்  உலகின் முதல் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், 23வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் கிர்ஜியோசை எதிர்கொண்டார். தொடக்க செட் முதலே பரபரப்பாக  நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிர்ஜியோஸ் 7-6 (13-11), 3-6, 6-3,  6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் மெத்வதேவிற்கு அதிர்ச்சி அளித்து காலிறுதி முன்னேறினார்.  மற்றொரு ரஷ்ய வீரர் காஞ்சாநோவ் காலிறுதிக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர்  பெற்ற ஒன்ஸ் ஜபியுர் தனது 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் வெரோனிக்காவை 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் கவுப், பிரான்சின் கார்சியா, ஆஸ்திரேலியாவின் அஜிலா ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

;