games

img

சென்னை ஓபன் ஸ்பெஷல்-2022 - மைதானத்தில் இருந்து நேரடி வர்ணனை : எம்.சதீஸ்குமார்

டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான டபிள்யு.டி.ஏ  (WTA - Women’s Tennis Association) தொடரின் 7-வது சீசன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி (SDAT - Sports Development Authority of Tamil Nadu Tennis Stadium) மைதானத்தில் நடைபெற்றது. தொடக்கம் முதலே ஒவ்வொரு ஆட்டங்களும் பரபரப்பாக நகர்ந்த நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசின்  லின்டா புருவிர்டோவா  (17 வயது) தனது அறிமுக தொடரிலேயே பட்டம் வென்று வரலாறு படைத்தார். இரட்டையர் பிரிவில் லூயிஸா (பிரேசில்) - கேப்ரில்லா (கனடா) ஜோடி மகுடத்தை வென்றது.

மகுடத்தை வென்றது.

தமிழ் மொழியை கவனமாக கவனித்த வீராங்கனைகள்

இறுதிப்போட்டியில் விளையாடிய அனைவரும் வெளிநாட்டு வீராங்கனைகள் தான். இரட்டையர் பிரிவு பட்டம் அளிப்பின் பொழுது தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் “இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு” உள்ளது என கூறினார். மெய்யநாதன் பேசிய அனைத்து தமிழ் வார்த்தைகள் புரிய வில்லை என்றாலும், வீராங்கனைகள் என்னவென்று கவனமாக கேட்டனர். முக்கிய மாக பட்டம் வென்ற லூயிஸா (பிரேசில்) - கேப்ரில்லா (கனடா) ஜோடி தமிழை ரசித்தனர். 

நிறைந்த மைதானம்...

தமிழ்நாட்டில் டென்னிஸ் விளையாட்டிற்கு போதுமான அளவு ஆர்வம் கிடையாது. கிராண்ட்ஸ்லாம் போன்ற தொடர்களை தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி அவ்வளவது தான். இதனால் டபிள்யு.டி.ஏ தொடருக்கு போதுமான ரசிகர்கள் வருவார்களா என்ற கேள்வி தொடக்கம் முதலே இருந்தது தான். ஆனால் எதிர்பார்த்த வகையில் டபிள்யு.டி.ஏ தொடரில் டிக்கெட் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. இறுதிப்போட்டியில் ரசிகர்களால் எஸ்டிஏடி மைதானம் நிரம்பி வழிந்தது. டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே நின்று போட்டியை காண எதாவது வாய்ப்பு கிடைக்குமா என காவல்துறையினர் மற்றும் போட்டி நடத்தும் பொறுப்பாளர்களிடம் கேட்டனர் மன்றாடினர்.

இது தமிழ்நாடு ஸ்பெஷல்...

பட்டத்திற்கான இறுதி போட்டியில் ஒற்றையர் பிரிவிலும் சரி, இரட்டை யர் பிரிவிலும் சரி எங்கள் மண்ணில் விளையாட வந்தவர்கள் என்ற ஒரே அடிப்படையில் வீராங்கனைகள் அனை வருக்கும் தமிழ்நாடு ரசிகர்கள் கை தட்டி ஆரவாரம் எழுப்பினர். இதனால் தங்களது சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற உணர்வுடன் வீராங்கனைகள் விளையாடினர். 

பால் பாய்ஸ் அபாரம்...

தமிழ்நாட்டில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று 5-வது வருடம் ஆகிவிட்டது. கடைசியாக ஏர்செல் சென்னை ஓபன் 2017-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா உள்ளிட்ட பல்வேறு தடைகளால் சர்வதேச போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. முக்கியமாக சென்னை டபிள்யு.டி.ஏ தொடர் திடீரென அறிவிக்கப்பட்ட நிலையில், பால் பாய்ஸ் (பந்து உதவியாளர்கள்) மிக குறுகிய கால பயிற்சியில் தான் இந்த தொடரில் களமிறங்கினார்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மிக முக்கியமான சர்வதேச டென்னிஸ் தொடரில் மிகுந்த கவனத்துடன், போதிய பயிற்சி இல்லாமல் அபாரமாக தங்களது பணிகளை செய்து அசத்தினர்.

தமிழ்நாடு பெயர் மட்டுமே!

பொதுவாக நாட்டில் எந்த சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டாலும் “இந்திய ஓபன்”, “இந்திய தொடர்”என்ற வார்த்தைகள் அடிக்கடி உதிரும். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்ற 2 சர்வதேச (செஸ் ஒலிம்பியாட், சென்னை டபிள்யு.டி.ஏ) தொடர்களிலும் இந்த வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தவில்லை. சென்னை டபிள்யு.டி.ஏ போட்டியில் சென்னை, தமிழ்நாடு என்ற வார்த்தைகள் ஒலித்தன. முக்கியமாக “இந்திய சர்வதேச தொடர்” என்பதை விட “தமிழ்நாடு சர்வதேச தொடர்” என்று ஒலித்தன. 

பிட்ச் சூப்பர்...

டபிள்யு.டி.ஏ தொடர் நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி (SDAT - Sports Development Authority of Tamil Nadu Tennis  Stadium) மைதானத்தில் நடைபெற்றது. டென்னிஸ் பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த மைதானம் கடைசியாக ஏர்செல் சென்னை ஓபனிற்கு பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு பயிற்சிக்கு (?) மட்டுமே பயன் படுத்தப்பட்ட நிலையில், டபிள்யு.டி.ஏ தொட ருக்கு மைதான பிட்ச் எப்படி? என்று தொடக்கம் முதலே ஒருவித சந்தேக கேள்வி எழுப்பப் பட்டிருந்தது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சிறப்பு ஏற்பாடால் பிட்ச் பகுதியில் மாற்றம் செய்ய ப்பட்டு கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெறும் ஹார்ட் (HARD) அமைப்பிற்கு நிகராக பவுன்சர் போல பந்துகள் எகிறின.

ஒத்துழைத்த காலநிலை  மாற்றம்...

பெரும்பாலும் வெப்ப மண்டல பூமியான சென்னை பெருநகரத்தில் வெயில் சற்று  அதிகம் தான். இதனால் இரவு 7 மணி வரை புழுக்கம் மற்றும் வெப்பமான சீதோஷ்ண நிலை இருக்கும். ஆனால்  தற்போது நிலவும் காலநிலை மாற்றத்  தால் வெயிலின் கொடூரம் சற்று குறைந்து அடிக்கடி மழைக்கு வாய்ப்பு  ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையால் சென்னை கடந்த சில நாட்களாக மந்த மான வானிலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை டபிள்யு.டி.ஏ தொடருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.  வெளிநாட்டு வீராங்கனைகள் வெப்பம் இல்லா சீதோஷ்ண நிலையால் தங்கள்  நாட்டு இடத்தைப் போன்று புத்துணர்வு டன் அதிரடியுடன் விளையாடினர்.

தோனியின் இடத்தை பிடிப்பாரா  லின்டா?

வெறும் 17 வயது தான். கொதிக்கும் ரத்தம் உள்ள வயது. ஆனால் பக்குவமான ஆட்டம். உதவும் மனநிலை என பல்வேறு சிறப்புகளுடன் செக்குடியரசு நாயகி லின்டா ஒரே வாரத்தில் “சென்னை நாயகி”யாக மாறியுள்ளார். இதே பாணியில் தான் இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் தொடர் மூலம் தற்போது “ தமிழ்நாட்டின் தல”, “சென்னை நாயகன்” என முழுநேர தமிழனாய் மாறியுள்ளார். தற்போது தோனியின் ஸ்டைலிலேயே தமிழ்நாட்டு விளையாட்டு ரசிகர் களால் போற்றப்படும் லின்டா, தோனியின் இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முதல்வர்  மு.க.ஸ்டாலின் வருகை... அதிர்ந்த மைதானம்!

ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தின் இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் போட்டியை காண தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மைதானம் வருகை தந்தார். அப்பொழுது மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைகளை தட்டி, முதல்வரே வருக எனவும், விசில் அடித்தும் ஆரவாரம் எழுப்பினர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வெளிநாட்டினரும், சென்னையில் தங்கி வேலை பார்க்கும் வெளி மாநிலத்தவர்களும் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு அளித்தனர். போட்டியை ஒளிபரப்பு உரிமம் பெற்றிருந்த சோனி நிறுவனம் ஸ்டாலின் வருகைக்கு சிறப்பு படத்தை பதிவிட்டது. இதே போல தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆருக்கு  இளைஞர்கள் தனியாக கோஷங்கள் எழுப்பி  வரவேற்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், கனிமொழி எம்பி, ஆ.ராசா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

லின்டாவுக்கு தமிழ்நாட்டில் உருவான தனி ரசிகர்கள் பட்டாளம் -லின்டா புருவிர்டோவா

சென்னை ஓபனில் பல்வேறு வீராங்கனை கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி னாலும், ரசிகர்களிடம் அன்பை கொள்ளையடித்தவர் செக்குடியரசின் லின்டா புருவிர்டோவா (17 வயது) தான். வயதுக்கு ஏற்ப அதிரடி, ஆதரவு தரும் ரசிகர்களை நோக்கி தனது அன்பை வெளிப்படுத்துதல் போன்ற நிகழ்வால் லின்டாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. இறுதிப்போட்டியில் ஐ லவ் லின்டா (I LOVE LINDA), சென்னை லவ் லின்டா (CHENNAI LOVE LINDA) என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன் ஆதரவு தெரிவித்தனர். இதனை கண்டு லின்டா ஆச்சரியமடைந்து வெற்றிப்புள்ளிகள் எடுக்கும் பொழுது அவர்களை நோக்கி ஆக்ரோஷமாக கத்தி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். பதிலுக்கு ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் எழுப்பினர்.




 

;