games

img

ரபேல் நடால் வலி நிறைந்த உலகமும்... 21 வருட போராட்டமும்

டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான ஸ்பெயி னின் ரபேல் நடால் சமீபத்தில் நிறைவு பெற்ற பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக காலிறுதி யில் வெளியேறினார். ரபேல் நடால் காயம் காரணமாக விலகுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 10 முறை காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். டென்னிஸ் உலகில் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத் துள்ளார். கிராண்ட்ஸ்லாம் வெற்றி களில் ஜோகோவிச் (24) முன்ன ணியில் இருப்பதால் நடாலின் சாதனை ஒரு சாதாரண செய்தியாகவே உள்ளது. ஆனால் நடால் காயம் காரணமாக வலி நிறைந்த உலகில் 21 ஆண்டுகளாக போராடிதான் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 

அதாவது 2003 முதல் 2024 வரை சுமார் 21 ஆண்டுகளில் 10 முறை காயம் காரணமாக டென்னிஸ் உலகில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், 10 முறை யும் காயத்தில் இருந்து மீண்டு பார்ம் பிரச்சனையை தீர்த்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை குவித்து அசத்தியுள்ளார்.

காயமும்.. நடாலும்.. 
2003 - முழங்கை காயம் : பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகல்
2004 - இடதுகால் முறிவு : பிரெஞ்சு, விம்பிள்டனை தவறவிட்டார்
2009 - முழங்கால் காயம் : 12 மாத ஓய்வு
2012 -  முழங்கால் காயம் : ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றம்
2014  - முதுகுத்தண்டு காயம் : சிறிது ஓய்வு, பார்மின்றி தொடர் தோல்வி
2016 - மணிக்கட்டு காயம் : பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகல்
2021 - இடது காலில் காயம் : அறுவை சிகிச்சையுடன் ஓய்வு
2022  - விலா/கால்/வயிறு பகுதிகளில் காயம் : சிறிது ஓய்வு, பார்மின்றி தொடர் தோல்வி
2023 - இடுப்பு வலி : அறுவை சிகிச்சையுடன் ஓய்வு
2024 - தொடையில் தசைநார் கிழிவு - பிரிஸ்பேன் ஓபனில் இருந்து விலகல்