நாட்டின் முதன்மையான முதல் தர ஆட்டமான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டின் (டெஸ்ட்) லீக் ஆட்டத்தில் தில்லி - சவுராஷ்டிரா அணியும் மோதின. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சவுராஷ்டிரா கேப்டன் உனத்கட் ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஹாட்ரிக் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பலமான தில்லி அணியை 133 ரன்களில் சுருள வைத்தார். 88 ஆண்டுகால ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்து புதிய வரலாறு படைத்துள்ளார்.