இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்?
வரவிருக்கும் டி-20 உல கக்கோப்பை தொடரோடு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்டருமான ராகுல் டிரா விட்டின் பதவிக்காலம் நிறைவடை கிறது.
இதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பிசிசிஐ) தற்போதே தொடங்கியுள்ளது.
கடந்த காலங்களை போல அல்லா மல் இந்த முறை வெளிநாட்டு பயிற்சி யாளரை நியமிக்க பிசிசிஐ தீவிரம் காட்டி வரும் நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்ட னும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பெயர் பரிசீலனை பிரிவில் முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர், ஹைதராபாத் அணியின் தற்போதைய பயிற்சியாளர் டாம் மூடி ஆகியோர்களின் பெயர்களும் பரி சீலனை பிரிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்
கட்டாய வெற்றியில் ஹைதராபாத்
இன்று குஜராத் அணியுடன் மோதல்
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெறும் 66ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - குஜராத் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி ஏற்கெனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிய நிலையில், இந்த ஆட்டம் ஹைதராபாத் அணிக்கு மிக முக்கியமான ஆட்டம் ஆகும். ஹைதராபாத் அணி பிளே சுற்றுக்கு தகுதி பெறும் பாதையில் பயணித்து வருகிறது என்றாலும், 66ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத்தை, ஹைதராபாத் அணி வீழ்த்தி விட்டால் பிரச்சனையின்றி 16 புள்ளிகளுடன் பிளே சுற்றுக்கு தகுதி பெற சாதகமான சூழல் ஏற்படும். குஜராத் அணியிடம் தோற்றால் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் மல்லுக்கட்ட வேண்டும். பிற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்த்து பிளே ஆப் சுற்றின் தகுதிக்கு தாளம் போட வேண்டி இருக்கும். இதனால் வியாழனன்று நடைபெறும் ஆட்டத்திலேயே குஜராத் அணியை வீழ்த்தி சிக்கலின்றி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் ஹைதராபாத் அணியும், ஆறுதல் வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் குஜராத் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கும்
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் இன்னும் 5 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்த 5 ஆட்டங்களும் பிளே ஆப் சுற்று தகுதிக்கு மிக முக்கியமானவை என்பதால் 5 ஆட்டங்களின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மிக முக்கியமாக நாங்கள் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்ற முனைப்பில் களமிறங்கும் சென்னை - பெங்களூரு அணிகளின் ஆட்டம் (மே 18) தூள் பறக்கும் என்பதால் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்ற னர்.
ஐபிஎல் 2024 இன்றைய ஆட்டம்
ஹைதராபாத் - குஜராத்
(66ஆவது ஆட்டம்)
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)