games

img

6 வீரர்கள் உட்பட 8 பேருக்கு பாதிப்பு... பாகிஸ்தான் தொடர் ரத்தாகிறது?

பாகிஸ்தான் நாட்டு க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி தற்போது டி-20 தொ டரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் இந்த சுற்றுப் பயணம் (3 டி-20, 3 ஒருநாள்)  இறுதி வரை சுவாரஸ்ய மாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு புதிய சிக்கல் முளைத்துள் ளது. மே.இ. தீவுகள் அணி யைச் சேர்ந்த ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸ், கைல் மையர்ஸ் ஆகிய 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலை யில், தற்போது ஷாய் ஹோப், அகேல் ஹுசைன், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகிய 3 வீரர்கள் உட்பட மொத்தம் 5 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப் பட்டு வருவதால் மே.இ. தீவு கள் அணி நிர்வாகம் பாகிஸ் தானில் தொடர்ந்து விளை யாடதயங்கி வருகிறது எனவும் இதுபற்றி பேசி முடிவெடுக்கவுள்ளதாக அறி வித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் தொடர் விரை வில் ரத்து செய்யப்படுகிறது என செய்திகள் வெளியாகி யுள்ளன. 

கண்டுகொள்ளாத விளையாட்டு உலகம்

கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பி ரிக்கா, பிரிட்டன், ஆஸ்தி ரியா ஆகிய நாடுகள் கடு மையாக பாதிக்கப்பட்டுள் ளன. இந்த ஒமைக்ரான் தொற்றை பற்றி உலக சுகா தார நிறுவனம் கவலையில் உள்ள நிலையில், விளை யாட்டு உலகம் கண்டு கொள் ளாமல் தங்கள் வேலையில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக உலக சுகாதார நிறுவனத்தின் கொ ரோனா வழிகாட்டு நெறி முறைகள் காற்றில் பறக்கின் றன. போட்டியை ரசிக்க வரும் மக்கள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. சமூக இடை வெளியை கண்டுகொள்வ தில்லை. ரசிகர்கள் இப்படி என்றால் மைதான நிர்வாகம் போட்டி அமைப்பாளர்கள் பெயரளவில் மட்டுமே நோட்டிஸ் ஒட்டி கண்டு கொள்ளாமல் விட்டு விடு கின்றனர்.

;