கிரிக்கெட்டில் தொல்லையை ஏற்படுத்தும் “வைப்ஸ் பாடல்கள்”
பல்வேறு விளையாட்டுகளை போல கிரிக்கெட்டும் நவீன வடிவங்களுடன் பயணித்து வருகிறது. மேலை நாடுகளில் கொண்டாடப்படும் நிகழ்வுகள் கிரிக்கெட்டிலும் ஆரம்பித்துவிட்டது. வாணவேடிக்கை, புகை வடிவமைப்புகள், நடன மங்கை கள் (சீர் லீடர்ஸ்) என அனைத்தும் கிரிக் கெட் விளையாட்டில் நுழைந்துவிட்ட நிலையில், மேலை நாடுகளின் பயன் படுத்தப்படும் “வைப்ஸ் பாடல்கள் (VIBES SONGS)” கிரிக்கெட் விளை யாட்டிலும் காலடி வைத்துள்ளது. அதிர வைக்கும் இசை மற்றும் பாடல்கள் மூலம் வைப்ஸ் பாடல்கள் ரசிகர்களி டையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தற்போதைய காலகட்டத் தில், கிரிக்கெட் உலகில் வைப்ஸ் பாடல் கள் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. எல்லை மீறும் செயல்கள் வைப்ஸ் பாடல்களால் வீரர்கள், ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும், சில நேரங்களில் தொல்லையாக உள்ளது. காரணம் வீரர்கள் வரவேற்பு, வெற்றி கொண்டாட்டம் ஆகியவற்றிற்கு இடை யே பயன்படுத்தப்பட்ட வைப்ஸ் பாடல்கள், தற்போது ஒவ்வொரு ஓவ ருக்கும் இடையே இசைக்கப்படுகிறது. வைப்ஸ் பாடல்கள் ஒலிக்கிறது. மேலும் மூன்றாம் நடுவர் கோரி க்கை இடையேயும் வைப்ஸ் பாடல் கள் ஒலிக்கிறது. இதனால் வீரர்கள் ஆலோசனை, நடுவர்கள் ஆலோசனை என பல்வேறு வகையில் தொல்லையை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு ஓவருக்கும் இடையே வைப்ஸ் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், வீரர்கள், நடுவர்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிக்கு “கோல்டன் டிக்கெட்”
13-வது உலகக் கோப்பை கிரிக் கெட் தொடர் இந்தியாவில் அக்., 5 அன்று தொடங்கு கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் 90% நிறை வடைந்த நிலையில், மும் பை, அகமதாபாத், சென்னை கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஏறக் குறைய நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், உலகக் கோப்பை தொடரை நேரில் கண்டுகளிக்க நாட்டில் உள்ள முக்கிய பிரபலங்களு க்கு கோல்டன் டிக்கெட்டை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் (பிசிசிஐ) வழங்கி வருகிறது. கோல்டன் டிக் கெட் வைத்திருப்பவர்கள் விஐபி இருக்கையில் அனை த்து உலகக்கோப்பை போட்டிகளையும் இலவச மாக காணலாம் என்ற நிலை யில், பாலிவுட் நடிகர் அமி தாப் பச்சன், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டு ல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தமிழ் நடிகர் ரஜினிகாந்திற்கும் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள் ளது. செவ்வாயன்று பிசிசிஐ செயலாளரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனான ஜெய் ஷா ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.