games

img

இந்திய அணி அபார வெற்றி: தொடரை கைப்பற்றி நியூசி.,க்கு பதிலடி

3 டி-20, 2 டெஸ்ட் என இரண்டு வித மான போட்டிகளை கொண்ட தொட ரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசி லாந்து அணி டி-20 தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.  அடுத்ததாக 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் (லக்னோ) பரபரப்பான கட்டத்தில் டிராவில் நிறைவு பெற்ற நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த வெள்ளியன்று தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது. நியூசி லாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு சுருண்டது. பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்து வெற்றி இலக்காக நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி அஸ்வின், ஜெயந்த் யாதவ்  (இருவரும் தலா 4 விக்.,) சுழலில் சிக்கி 56.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றி உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. ஆட்டநாயகனாக மயாங் அகர்வாலும், தொடர் நாயனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.

;