games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2022

உலகக்கோப்பை யாருக்கு?

இன்று இறுதி ஆட்டம்

காலநிலை மாற்றத்தால் மிரட்டிய மழையின் பதற்றத்துக்கு இடையே ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 8-வது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் கோப்பைக்கு மல்லுக்கட்ட உள்ள நிலையில், இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்ன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து

2009 சாம்பியன்

2010 சாம்பியன்

இடம் : மெல்போர்ன்
நேரம் : மதியம் 1:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் இதர இந்திய மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் சந்தா கணக்கு இருந்தால் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் நேரடி ஒளிபரப்பை காணலாம்.
மழை வருமா? : 70 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

யாருக்கு சாதகம்?

இரு அணிகளும் சரிசம பலத்தில் இருப்பதால் யாருக்கு கோப்பை என உறுதியாக கூற முடியாது. ஆனால் பலம், பலவீனத்தை பொறுத்து  எந்த அணிக்கு சாதகம் என்பதை கணிக்க இயலும்.

பாகிஸ்தான்

பலம்
1.     வேகம், சூழல் என இரண்டிலும் அசத்தலான பார்மில் இருப்பது
2.     அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களும் 140 கிமீ வேகத்தில் பந்துவீசுவது கூடுதல் பிளஸ்
3.     கேப்டன் பாபர் அசாம் - ரிஸ்வானின் கட்டுக்கோப்பான தொடக்கமும், பின்வரும் வீரர்களின் மிரட்டலான அதிரடி பேட்டிங்கும் பேட்டிங்கில் நல்ல அடித்தளத்தை அமைக்கும்
4.     சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப துடிப்பான பீல்டிங்
5.     இந்திய கேப்டன் தோனியை போன்று அமைதியான, திறமையான கேப்டன்ஷிப் (பாபர் அசாம்)
பலவீனம்
1.     திறமையான வீரர்கள் இருந்தாலும் பார்ம் பிரச்சனை சிக்கலாக உள்ளது
2.     வேகப்பந்துவீச்சாளர்கள் அசுர வேகத்தில் பந்துவீசினாலும் ஷாஹீன் அப்ரிடியை போல அனைவரும் திடமாக பந்துவீசுவது கிடையாது
3.     முதல் 2 விக்கெட்டுகள் சரிந்தால் மிடில் ஆர்டர் மொத்தமாக சரிவது
4.     பதற்றமான சூழ்நிலையில் முக்கிய ரன் அவுட் மற்றும் கேட்சுகளை தவறவிடுவது
5.     பவுன்சர் வீசுவது போல் ஷார்ட் பிட்ச் வகை பந்து வீச்சுகளை அதிகம் வீசுவது

இங்கிலாந்து

பலம்
1.     மூத்த வீரர்களின் ஆலோசனைகளை மதிப்பு அளித்து அணியை நடத்தும் சிறப்பான கேப்டன்ஷிப் (பட்லர்)
2.     பலமான பேட்டிங் மற்றும் 9 வீரர்களும் பேட்டிங்கில் ஜொலிப்பது
3.     வேகம், சூழல் என இரண்டிலும் ஒரே மாதிரியான தாக்குதல் பாணியை வெளிப்படுத்துவது
4.     கடைசி 4 ஓவர்களில் ரன் விட்டுக்கொடுப்பதை தடுப்பது
5.     பழக்கப்பட்ட மண் மற்றும் சீதோஷ்ண நிலை மற்றும் ஆஷஸ் அனுபவம் கூடுதல் பலம்
பலவீனம்
1.     பலமான பேட்டிங் ஆர்டர் இருந்தும் ஒன்று சரிந்தால் ஒன்பதும் சரியும் என்பது போல சீட்டுக்கட்டாய் சரியும் மிடில் ஆர்டர் பேட்டிங்
2.     தொடக்கத்தில் ஷார்ட் பிட்சுகளை அதிகம் வீசி ரன்களை வாரிக்கொடுப்பது
3.     பீல்டிங்கில் தேவையில்லாமல் டைவ் அடித்து பந்தை பவுண்டரி லைனுக்கு கோட்டை விடுவது
4.     பார்ம் பிரச்சனை இல்லாவிட்டாலும் வீரர்கள் சுறுசுறுப்பின்றி செயல்படுவது
5.     ரன் ஓரளவு குவித்துவிட்டால் பந்துவீச்சில் அசால்ட்டாக செயல்படுவது