games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா 2023

கிரிக்கெட் உலகின் 5-ஆவது உலகக்கோப்பை ஓசியானியா (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து) கண்டத்தில் 1992இல் நடைபெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக வீரர்கள் வண்ண ஆடைகளுடன் களமிறங்கினர். பந்தின் நிறமும் வெள்ளையாக மாறியது. கணிசமான ஆட்டங்கள் மின்னொளியில் நடத்தப்பட்டன.  இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கி லாந்து, பாகிஸ்தான், இலங்கை,  ஜிம்பாப்வே புதிதாக மற்றும் ஆப்பிரிக்கா சார்பில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக களமிறங்கியது. முதல் முறையாக களமிறங்கினாலும் கிரிக்கெட் உலகின் அபாயகரமான அணி என்ற பெயரை 1992 முதல் இன்று வரை கம்பீரமாக  கையில் வைத்துள்ளது. முன்னாள் சாம்பியன்களான இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் குரூப் சுற்றோடு வெளியேறிய நிலையில், தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வரை  முன்னேறி அசத்தியது. எனினும் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா போராடி வீழ்ந்தது. நியூசிலாந்து அணி 3 முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று பாகிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டு வழக்கம் போல வெளியேறியது. முதல் உலகக்கோப்பையை தவிர மற்ற 3 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி அரையிறுதியில் வெளியேறிய பாகிஸ்தான் 5-வது உலகக்கோப்பையிலும் அரையிறுதிக்கு முன்னேறி, நியூசிலாந்து அணியை துவம்சம் செய்து முதன்முறையாக இறுதிக்கு முன்னேறியது. 4 உலகக்கோப்பையில் ஒருமுறை அரையிறுதியில் வெளியேறி, 3 முறை கோப்பையை நழுவவிட்ட இங்கிலாந்து அணி இந்த முறை கண்டிப்பாக மகுடம் சூட வேண்டும் என்ற முனைப்பில் தென் ஆப்பிரிக்காவை அதிர்ஷ்ட வாய்ப்புடன் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.  இறுதிப்போட்டியில் வித்தியாசமான ஆட்ட முறையுடன் பதுங்கி பாய்ந்த இம்ரான் கான்  தலைமையிலான பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்து உலகக் கோப்பையை வென்றது.