games

img

விளையாட்டு...

உடைகிறது ஐரோப்பிய கால்பந்து சாம்ராஜ்ஜியம்?

கால்பந்து என்றால் உல கில் 2 முக்கிய கண்டங்க ளின் பெயர்கள் அதிகமாக ஒலிக்கும். ஒன்று தென் அமெரிக்கா. அர்ஜெண்டி னா, பிரேசில், உருகுவே சாம்பியன் அணிகள் மற்றும் சாம்பியன் அணிகளில் விளையாடிய வீரர்களின் ஆட்டங் களால். மற்றொன்று ஐரோப்பா. சாம்பி யன் அணிகள் மற்றும் காசு படைத்த, வளமிக்க கிளப் அணிகளால்.  உலகக்கோப்பை தவிர்த்து மற்ற நேரங்களில் ஐரோப்பிய கால்பந்து உலகம் கொடிகட்டி பறக்கும். காரணம் அங்கு நடைபெறும் கிளப் ஆட்டங் களில் உலகின் முன்னணி வீரர்கள் இருப்பதால்தான். இந்நிலையில், நடப்பாண்டு முதலே ஐரோப்பிய கால்பந்து உலகம் தனது ஆதிக்கத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அள வில் பலத்த அடி வாங்கி வருகிறது. இதற்கு காரணம் 3 பெரிய நட்சத்திரங் கள் வெளியேறியதுதான். ஐரோப்பிய கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடிய போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபிய கிளப் அணியான அல் நாசர் அணிக்கும், உலக சாம்பியன் அணியான அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி அமெரிக்க கிளப் அணியான மியாமிக்கும் தாவியுள்ளனர்.  இந்த அதிர்ச்சியில் இருந்து ஐரோப்பிய கால்பந்து உலகம் மீள்வ தற்குள் முன்னாள் உலக சாம்பியனான பிரேசில் அணியின் கேப்டன் நெய்மார், தான் விளையாடும் பிரான்ஸ் கிளப் அணியான பிஎஸ்ஜியில் இருந்து சவூதி கிளப் அணியான அல் ஹிலால் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதை  கண்டு இளம் வீரர்கள் பலர் ஐரோப்பிய கிளப் அணியை விட்டு சவூதி மற்றும் அமெரிக்கா கிளப் அணி களுக்கு தாவ ஆயத்தமாகி வரு கின்றனர். 

பணமழையில் நனைய செல்கிறார்கள்

மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் பெட்ரோல் வளத் தால் கல்லா கட்டும் நிறுவனங்கள் கால் பந்து கிளப் அணிகளை வாங்கி பணத்தை தண்ணீர் போல இறைத்து முன்னணி வீரர்களை விலைக்கு வாங்கி வருகிறது. இந்த பண மழையில் ரொனால்டோ, நெய்மார் உள்ளிட்டோர் சிக்க, மெஸ்ஸி மனமாற்றத்தின் அடிப் படையில் அமெரிக்கா சென்றுள்ளார். சவூதியின் பணமழையில் மேலும் பல நட்சத்திர வீரர்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஐரோப்பிய கால்பந்து உலகம் விரைவில் காற்று வாங்க காத்துக் கொண்டிருக்கும் நாள்  வெகு விரைவில் இல்லை.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்ஷியா அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி டென்னிஸ் போட்டி  என அழைக்கப்படும் வெஸ்ட ர்ன் மற்றும் சவுத்தர்ன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் ஓஹியோ நக ரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனையான கரோலின் கார்சியா அமெரிக்காவின் ஸ்டீபன்ஸை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே பரபரப் பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கார்சியா 6-4, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறினார். அதிரடிக்கு பெயர் பெற்ற ஸ்டீபன்ஸ் 2-வது சுற்றுக்கு முன் னேறினார். தரவரிசை மற்றும் அனு பவத்தில் முன்னணியில் இருக்கும் வீராங்கனைகளான அமெரிக்காவின் கீஸ், சுவிட்சர்லாந்தின் பென்கிக் ஆகி யோரும் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினர். பார்மின்றி திணறும் பெலிக்ஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான கனடாவின் பெலிக்ஸ், பிரான்சின் அட்ரியனிடம் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறினார். பார்மின்றி தவிக்கும் பெலிக்ஸ் கடந்த 6 மாத காலமாக முக்கிய தொடர்களில் காலிறுதி செல்லவே மிக மோசமான அளவில் திணறுகிறார். இதே பிரிவின் மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் அதிரடிக்கு பெற்ற ரஷ்யாவின் ரப்லவ் பின்லாந்தின் எமிலிடம் 6-7 (10-12), 7-5, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.  அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறி யதாக கூறப்பட்டுள்ள வீரர், வீராங் கனைகளை வெளியேற்றியவர்கள் தரவரிசையில் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் ஓய்வு

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி ஆட்ட களைப்பை போக்க 2 நாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனியன்று 3-வது சுற்று ஆட்டமும், விடுமுறை நாளான ஞாயிறன்று இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது.