பதற்றமிக்க பெனால்டி சூட் அவுட்டில் மிகவும் கூலாக பிரான்ஸ் அடித்த 4 பெனால்டி ஷாட்களில் 2 ஷாட்களை அபாரமாக தடுத்து உலகக்கோப்பையை தனது நாட்டிற்கு பெற்றுக்கொடுத்தார் அர்ஜெண்டினா கோல் கீப்பர் மார்ட்டீனஸ். முக்கியமாக இறுதி ஆட்டத்தில் மார்ட்டீனஸ் சொதப்பி இருந்தால் பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருக்கும். பெனால்டி சூட் அவுட்டில் 2 வாய்ப்பை தடுத்தது மூலம் மார்ட்டீனஸ் ஆடிய நடனம் கவனத்தை ஈர்த்தது.