games

img

விளையாட்டு செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து - 2024 16 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறுமா துருக்கி?

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐரோ ப்பிய கால்பந்து தொடர் தற்போது இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று நள்ளிரவு நடைபெறும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் நெதர் லாந்து-துருக்கி அணிகள் மோதுகின்றன.  துருக்கி - பயம் கால்பந்து உலகில் இரண்டாம் தர  அணிகளில் ஒன்றான துருக்கியை கண்டாலே எதிரணிக்கு சற்று பயம் இருக்கும். இரண்டாம் தர அணியாக இருந்தாலும் திடீரென பார்ம் பெற்ற அணியை போல உருவெடுத்து ஒரு  தொடர் முழுவதும் மிரட்டும். அந்த வகையில் 2002இல் ஜப்பான் - தென் கொரியா நாடுகளில் நடைபெற்ற உல கக்கோப்பை கால்பந்து தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றா வது இடத்தைப் பிடித்து மிரட்டிய துருக்கி, 2008இல் ஆஸ்திரியா - சுவிட்சர்லாந்து நாடுகளில் கூட்டாக நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. இந்த இரண்டு சம்பவங்க ளும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் நிகழ்ந்தவை என்பதால், 2008 சீசனைப் போல நடப்பாண்டு சீசனிலும் அபார  ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் துருக்கி காலிறுதியில் பலமான நெதர்லாந்து அணியை வீழ்த்தி 16  ஆண்டுகளுக்கு பிறகு அரையிறு திக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்குகிறது.  அதேபோல முன்னாள் சாம்பிய னான நெதர்லாந்து அணி கடைசி யாக 1988இல் (ஜெர்மனி மண்ணில்) கோப்பை வென்றது. அதன்பிறகு காலி றுதி, அரையிறுதி, நாக் அவுட் என்று  வெளியேறிக் கொண்டு இருக்கும் நிலை யில், 1988இல் கோப்பை வென்ற அதே ஜெர்மனி மண்ணில் மீண்டும் கோப்பை யை கைப்பற்றும் முனைப்பில் நெதர் லாந்து அணி அரையிறுதி கனவோடு களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றிக் கனவோடு களம் காண உள்ள தால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து

நெதர்லாந்து - துருக்கி ஆட்டத்திற்கு முன்னதாக 3ஆவது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. சுவிட்சர்லாந்து அணி நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் இத்தாலி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், அதே ஆட்டத்திறனுடன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதன்முறையாக ஐரோப்பிய கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்குகிறது. கடந்த முறை நூலிழை யில் கோப்பையை நழுவவிட்ட இங்கிலாந்து அணி இம்முறை எப்படியாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரடியாக விளையாடி வரும் நிலையில், சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி 3ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்குவதால் இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து
இடம் : டஸ்ஸல்டார்ப், ஜெர்மனி
நேரம் : இரவு 9:30 மணி

நெதர்லாந்து - துருக்கி
இடம் : பெர்லின், ஜெர்மனி
நேரம் : நள்ளிரவு 12:30 மணி

சேனல்: சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஒடிடி)

நியூயார்க் கோபா அமெரிக்கா - 2024 அரையிறுதியில் அர்ஜெண்டினா

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 48ஆவது கோபா அமெரிக்கா தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள  நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா - ஈகுவடார் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35ஆவது நிமிடத்திலேயே அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மார்டினெஸ் கோலடித்தார். 90ஆவது நிமிடம் வரை ஈகுவடார் பதிலுக்கு கோலடிக்காமல் இருந்த நிலையில், 90ஆவது நிமிடத்திற்கு பிறகு வழங்கப்பட்ட உதிரி நிமிடத்தில்  ஈகுவடார் கோலடிக்க ஆட்டம் பரப்பான நிலையில், ஆட்டநேர முடிவிலும், கூடுதல் நேர முடிவிலும் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்காமல் இருந்தது. இதனால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட் முறையில் அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், இதன்மூலம் அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இன்றைய காலிறுதி ஆட்டம்

நெதர்லாந்து - துருக்கி
இடம் : பெர்லின், ஜெர்மனி
நேரம் : நள்ளிரவு 12:30 மணி

சேனல்: சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஒடிடி)