election2021

img

சாதி விளையாட்டை கையிலெடுத்த திரிணாமுல், பாஜக.... மே. வங்கத்தில் அதிகாரத்தைப் பிடிக்க வகுப்புவாத பிளவை உருவாக்க ஏற்பாடு....

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில், ஆட்சியதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக, திரிணாமுலும் பாஜகவும், கடந்த எழுபது ஆண்டுகளில் மேற்கு வங்கம் காணாதசாதி அடிப்படையிலான வகுப்புவாத அரசியலை முன்னிறுத்தி வருவதாக விமர் சனங்கள் எழுந்துள்ளன.

மேற்கு வங்கத்தில் கடந்த காலங்களில்பெரிய வன்முறைகள் நடந்திருந்தாலும், வகுப்புவாத பிளவை உருவாக்க இதுபோன்ற ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறைஎன்று அந்த விமர்சனங்கள் கூறுகின்றன.பாஜக மற்றும் திரிணாமுல் தலைவர்களின் ஆத்திரமூட்டும் கருத்துக்களைத்தொடர்ந்து சனிக்கிழமை சீதல் குச்சிதொகுதியில் நடைபெற்ற நான்காவதுகட்ட வாக்குப்பதிவில் 6 பேர் கொல்லப் பட்டனர். பலர் காயமடைந்தனர். 

பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ், வங்கதேசத்தை ஒட்டியுள்ள ஒரு தொகுதியில் மிகவும் ஆத்திரமூட்டும் கருத்தை தெரிவித்தார். ஆரம்பத்தில் இருந்தே மாநிலத்திற் குள் மத்திய துணை ராணுவப் படைகள்வருவதை எதிர்த்த மம்தா பானர்ஜி, ராணுவத்தை தடுக்குமாறு அணிகளைக் கோரினார். பின்னர் துணை இராணுவத்தின் மீதுதாக்குதல் நடத்தவும், பதிலுக்கு அது துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு கொண்டு செல்லப்பட்டன. துப்பாக்கிச் சூடுநடந்த பகுதிக்கு அரசியல் தலைவர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது.இதனிடையே, திரிணாமுல் - பாஜக அரசியலுக்கு மாற்றாக, இடது முன்னணி யுனைடெட் மோர்ச்சா மட்டுமே மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் ஞாயிறன்று கறுப்பு தினமும் கடைப்பிடித்தது. 

;