election2021

img

வங்கத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் பெறாது... எனது பேச்சை வெட்டி, ஒட்டி ஆடியோ வெளியிட்டாலும் சொன்னது சொன்னதுதான்... பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்...

கொல்கத்தா:
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில்ஆளும் திரிணாமுல் கட்சிக்கு வேலைசெய்து வருகிறார். அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்தளித்து வருகிறார்.

அந்த வகையில், மேற்குவங்கத் தில் பாஜக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று தொடர்ந்து கூறி வரும்அவர், பாஜக 100 இடங்களுக்கு மேல்பெற்றால், டுவிட்டர் பக்கத்தை விட்டுவெளியேறி விடுவதாகவும், 200 இடங்களைப் பெற்றால், தேர்தல் வியூகம் வகுத்துத் தரும் தொழிலை விட்டே வெளியேறி விடுவதாகவும் சவால் விடுத்துள்ளார்.

ஆனால், மேற்கு வங்கத்தில் பாஜகதான் வெற்றிபெறும் என்று, பிரசாந்த் கிஷோரே பேசியிருக்கிறார் என்று ஆடியோ ஒன்றை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டு, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா பரபரப்பை ஏற்படுத்தினார்.கிளப்ஹவுஸ் (Clubhouse) என்றஉரையாடல் செயலியில் பத்திரிகையாளர்களுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி என்று கூறப்படும் அந்தஆடியோவில், “மேற்குவங்கத்தில் தேர்தலில் 3 விஷயங்கள் பாஜகவுக்குசாதகமாக உள்ளன. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை, ஆளும்திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீதான 10ஆண்டு அதிருப்தி, ஆளும் கட்சியின் இஸ்லாமிய ஆதரவு அரசியல், இதன் காரணமாக பட்டியலின வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக செல்வது.. ஆகிய மூன்றும்தான்... மேலும், மேற்குவங்கத்தில் இந்தி பேசுவோர் ஒரு கோடி எண்ணிக்கையில் உள்ளனர், இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள், மதுவாஸ் சிறுபான்மையினரில் 75 சதவிகிதம் பேர் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். 50 முதல்55 சதவிகிதம் வரையிலான இந்துக் களின் ஆதரவும் பாஜக-வுக்கு உள்ளது” என்று பிரசாந்த் கிஷோர் பேசியிருப்பதாக மால்வியா குறிப் பிட்டிருந்தார்.மேலும், இந்த பேட்டி மூலம் பிரசாந்த் கிஷோரே பாஜகவின் வெற்றியை ஒப்புக்கொண்டு விட்டார் என்றும்அமித் மால்வியா, குறிப்பிட்டிருந்தார். இது மேற்கு வங்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், தனது பேச்சு என்றுகூறப்படும் அந்த ஆடியோவை முழுமையாக மறுக்காத பிரசாந்த் கிஷோர், பாஜக எனது பேச்சை தங்கள் தலைவர்களின் வார்த்தைகளை விட தீவிரமாக எடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சிஅடைவதாகவும், அவர்கள் (பாஜக)தைரியத்துடன் முழு உரையாடலையும் காட்ட வேண்டும், அதன் சிறிய பகுதிகளை மட்டுமே வெளிப்படுத்தி உற்சாகமடையக்கூடாது என்றும் கூறியுள்ளார்.மேலும், “நான் இதனை முன்பே கூறியிருக்கிறேன், அதையேஇப்போதும் கூறுகிறேன். மேற்குவங்கத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது” என்று பதிவிட்டுள்ளார்.

;