election2021

img

பாஜக கூட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்.... போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதி....

விருதுநகர்:
சட்டமன்றத் தேர்தலையொட்டி விருதுநகர் தொகுதியில்  பாஜக சார்பில் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார். இந்நிலையில் பாஜக வின் தேர்தல் அலுவலகம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட   ஊழியர்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வந்திருந்த  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஏராளமான கார்களில் பவனி வந்தார். இதனால், சாத்தூர் சாலை மற்றும் அருப்புக்கோட்டை சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.சாத்தூர் சாலையில் எதிர் திசையில் வாகனங்கள் சென்றன. ஆனால், இதை தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இராஜ பாளையத்தில் போட்டியிடுகிறார். இவரது காரின் பின்னால்10க்கும் மேற்பட்ட கார்கள் வந்தன. அதை தேர்தல் அதிகாரிகள் தடுக்கவில்லை.

;