election2021

img

ஓட்டுப்பதிவு நேரம் தெரியலையே....

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் மானாமதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு, வாக்களிக்கும் போது செய்ய வேண்டிய நடைமுறைகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவின் போது அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற அலுவலர்களிடம் வாக்குப்பதிவு நேரம் என்ன என ஆட்சியர் மதுசூதன்ரெட்டி கேட்க, ‘‘அலுவலர்கள் பலரும் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை’’ என பதில் அளிக்க, கொரோனா பரவல் காரணமாக இந்த முறை வாக்குப்பதிவு நேரம் காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் குறித்து முறையாக தெரிந்து கொள்ளுங்கள் என முகம் சிவந்த நிலையில் கூறினார்.

;