election2021

img

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், கேரளத்தில் இடது முன்னணியும் பெரும் வெற்றி பெறும்... பிரபல ஊடகவியலாளர் பி.சாய்நாத் நம்பிக்கை...

நாட்டில் தேர்தல் நடைபெறுகிற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு உதவுவதற்காக மத்திய ஏஜென்சிகளெல் yhம் வரிந்துகட்டிக் கொண்டு இறங்கியுள்ளன என்கிறார் பி.சாய்நாத். இவர் கிராமப்புற மக்களின் வாழ்க்கைச் செய்திகளை வெளிக்கொணரும் பிரபல ஊடகவியலாளர்; மகசேசே விருதுபெற்றவர். இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் ஒரு தேர்தல் கமிஷன் அண்மைக் காலத்தில் இருந்ததில்லை என்கிறார். மிக அதிகமாய் பலவீனமாக்கப்பட்ட மத்திய ஏஜென்சிகளில் ஒன்றுதான் தேர்தல் கமிஷன் என்கிறார். 

பி.சாய்நாத் மலையாள நாளேடாகிய ‘மாத்ருபூமி’ இணையப் பதிப்புக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

நீண்ட நாட்களாக நான் மேற்கு வங்கத் தேர்தலில் கவனம் செலுத்தாததால் அங்கு இருக்கிற நிலைமையை சரியாக அறிந்துகொள்ளவில்லை. மேலும், இப்போது ஊடகங்களில் வருகிற பலவும் நம்ப முடியாதவையாக இருப்பதால் ஊடகங்கள் சொல்வதை மட்டுமே பார்த்து வெற்றி வாய்ப்பைப் பற்றி என்னால் கூறமுடியவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவானநிலைப்பாடுகளையே கார்ப்பரேட் ஊட கங்களில் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். 

பாஜகவுக்கு டெபாசிட்கூட கிடைக்காது
ஆனால், கேரளத்திலும் தமிழ்நாட்டி லும் உள்ள சூழலை மிக எளிதாகச் சொல்லிவிட முடியும். இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜகவுக்குப் பெரும்பாலான இடங்களிலும் டெபாசிட் கூடக் கிடைக்காது.கேரளத்தில் பாஜகவுக்கு இரண்டு இடங்களுக்கு மேல் வெற்றி வாய்ப்பு தெரியவில்லை. தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக போட்டியிட்டாலும் எல்லா இடங்களிலும் மிக மோசமான தோல்வியையே அது சந்திக்கும். திமுக கூட்டணி இந்தமுறை பெரும் வெற்றி பெறும் என்றே நான் கருதுகிறேன். 

புதுச்சேரியின் நிலைமை வித்தியாச மானது. தமிழ்நாட்டில் இருப்பது போன்ற நிலைமை அங்கு இல்லை. பிரத்யேகமான கூட்டணிகள் அங்கு செயல்படுகின்றன. அசாமில் பாஜக எதிர்ப்புக் கூட்டணி சிறந்த வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளது. அதனால் பாஜகவுக்கு அங்கு கடந்தமுறை இருந்தது போன்று விஷயங்கள் அவ்வளவு எளிதாக இல்லை என்றே நான் கருதுகிறேன். மேற்கு வங்கத்தில் வர்க்க அடிப்படையிலான அரசியலிலிருந்து சாதி, மத அடிப்படையிலான பிளவு நிலைக்குத் தோற்றம் மாறியிருக்கிறது. இப்போது கார்ப்பரேட் சக்திகள் தேர்தல் களத்தில் உள்ளன. ஊழலும் இப்போது அதிக வலுப்பெற்றுள்ளது. கேரளம் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட மிகவும் முன்னிலையில் உள்ளது. சபரிமலை விஷயம் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரியமுன்னேற்றம் எதுவும் ஏற்படுத்திவிட வில்லை.

பாஜகவுக்கு உதவியாகமத்திய ஏஜென்சிகள்
வங்கத்தில் திரிணாமுல் தலைவர் களுக்கு எதிராக ரெய்டு நடந்தது உண்டு. ஆனால், சாரதா சிட்பண்ட் கம்பெனி ஊழலில் சிக்கிய பிறகு பாஜகவுக்கு கட்சி மாறிய முக்கியமான திரிணாமுல் தலைவர்களுக்கு எதிராக ரெய்டோ, விசாரணை யோ எதுவும் நடைபெறவில்லை. ஊழலில்  மிகவும் கரைபுரண்டு, பிறகு பாஜகவில் போய்ச் சேர்ந்த எல்லோருக்கும் எல்லா பாதுகாப்பும் கிடைக்கிறது. நாட்டின் எல்லா இடங்களிலும் தேர்தல் நடைபெறுகிற எல்லா மாநிலங்களிலும் எல்லா மத்தியஏஜென்சிகளும் மத்திய அரசின் ஆணையம் பாஜகவுக்கு உதவுவதற்காக  வரிந்துகட்டிக் கொண்டு இறங்கியுள்ளன. இவ்வளவு மோசமாகச் செயல்படும் தேர்தல் பிரச்சாரமாக அண்மைக் காலத்தில்இருந்ததில்லை என்றே சொல்லலாம். ஒரு கட்சிக்காக மத்திய அரசின் எல்லாஏற்பாடுகளும் ஏஜென்சிகளும் செயல்படு கின்றன. அதனால் கடந்த சில ஆண்டு களாகவே நாட்டின் தேர்தல் சூழல் மாறிவிட்டது என்றே நான் கூறுகிறேன்.பல மாநிலங்களிலும் தேர்தலில் தோல்வியடைந்த பாஜகவே அதிகாரத்தில் ஏறியதை நாம் கண்டோம். பெரும்பான்மை கிடைக்காத கர்நாடக மாநிலத்தில் அவர்கள் ஆட்சியமைத்தார்கள். கோவாவில் காங்கிரஸைவிடக் குறைவான சீட்டுகள்தான் பாஜகவுக்குக் கிடைத்தன. ஆனால் பாஜக, காங்கிரஸை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. சொந்த கூட்டணியில் உள்ள எம்ஜெபி கட்சியையே உடைத்துஅதிகாரத்தைத் தனக்கு உறுதிசெய்து கொண்டது. மத்தியப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி தோற்றுவிட்டாலும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவைப் பயன்படுத்தித் தேர்தலைச் சீர்குலைக்க முயன்றனர். தோற்றாலும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்கிற விஷயமாகி விட்டது.

நன்றி : “மாத்ருபூமி” (28.3.2021)  

தமிழில்: தி.வரதராசன்

;