election2021

img

44 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தும் பணி தொடக்கம்....

சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை கூடுதலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துவாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்புக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்படுகிறது. ஏற்கனவே பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு வசதிகள் செய்யப்படுகிறது.

மொத்த வாக்குச்சாவடிகளில் 30 சதவீதம் வாக்குச் சாவடிகளுக்கு குறையாமல் வெப்கேமரா பொருத்தும் படி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 44 ஆயிரத்து 758 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்படுகிறது.இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணிதொடங்கி உள்ளது. கேமரா பொருத்தப்படும் வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடி நேரடியாக கண்காணிக்கலாம்.வெப்கேமரா பொருத்தப்படாத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். இந்த வெப்கேமரா பொருத்து வது மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

;