election2021

img

7 அமைச்சர்களுக்கு சிக்கல்.... .

“வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரம், தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, பாஸ்கரன், கடம்பூர் ராஜு ஆகிய ஏழு அமைச்சர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள். அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் பி.வி. கதிரவன், உள்ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறார். முக்குலத்தோர் அமைப்பின் தலைவர் கணேசத் தேவர், உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இந்த அதிருப்திகளை சமாளிக்கத்தான் டாக்டர் சேதுராமன் கட்சியையும், சில லெட்டர்பேடு அமைப்புகளையும் வளைக்க அதிமுக காய் நகர்த்துகிறது. ஆனாலும் அந்த அமைப்பினர் ஆதரவு கடிதம் கொடுத்ததோடு நின்றுவிடுவார்கள்; வாக்கு கேட்டு சமுதாய மக்களை சந்திக்க செல்லமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

இன்னொரு பக்கம், பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகளும், தென் மாவட்டங்கள் முழுவதும் அதிமுகவைக் கண்டித்து கருப்புக்கொடி ஏற்றுவது அதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்வது என தீவிரமாக களத்தில் இறங்கி செயல்படத் துவங்கியுள்ளன. இதுதவிர அந்த அமைப்புகள் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு வாக்குகளை சிதறடிக்கவும் தயாராகி வருகின்றன” என்று விகடனில் கழுகார் எழுதியிருக்கிறார்.
 

;