election2021

img

முதல்வர் பினராயி விஜயனுக்கு கண்ணூரில் உற்சாக வரவேற்பு...

கண்ணூர்:
கேரள மாநிலத்தின் 15-ஆவதுசட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப் ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரம் ஏப்ரல் 4-ஆம் தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், கேரளத்தில் கடந்த மார்ச் 17 அன்று தனது தேர்தல்பிரச்சாரத்தைத் துவங்கிய கேரளமுதல்வர் பினராயி விஜயன் தற் போது கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நெருங்கியுள்ளார்.மார்ச் 17 அன்று வயநாட்டில் புறப்பட்ட பினராயி விஜயன் , மலப்புரம்,பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, வெள்ளியன்று தனது சொந்த தொகுதியான தர்மடம் அமைந்துள்ள கண்ணூருக்கு வந்தார். அப்போது அவரைமக்கள் பெருந்திரளாக கூடி வரவேற்றனர். சிறுவர்கள் பூங்கொத்துகளை காண்பித்தும், பலூன்களை ஏந்தியபடியும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி குறைந்தது 71 இடங்கள் முதல் அதிகபட்சம் 91 இடங்கள் வரை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி
யமைக்கும்; பினராயி விஜயன் மீண்டும் முதல்வராவார் என்றேஅனைத்துக் கருத்துக் கணிப்புகளும் கூறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

;