election2021

img

இடதுசாரிகளைத் தோற்கடிக்க காங்கிரஸ் - பாஜக ரகசிய உறவு.... ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் ஓ.ராஜகோபால்....

திருவனந்தபுரம்:
கேரளாவில் சில தொகுதிகளை பாஜக-வுக்கு விட்டுத் தரவும், அதற்கு பதிலாக மற்ற தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணிக்கு பாஜக வாக்களிக்கவும்- மறைமுக ஏற்பாடுகள் ஆகியிருப்பதாக கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டிஅண்மையில் குற்றம் சாட்டியிருந் தார்.

செங்கன்னூர் தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காத-ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான ஆர். பாலஷங்கர் அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி இவ் வாறு அவர் கூறியிருந்தார்.ஆனால், “இடதுசாரிகளுடன் அல்ல, இடதுசாரிகளைத் தோற்கடிப்பதற்காக காங்கிரசுடன்தான் தங்களுக்கு ரகசிய உறவு இருந்தது”என்று பாஜக மூத்த தலைவரும், அக்கட்சிக்கு கேரளத்தில் இருக்கும்ஒரே எம்எல்ஏ-வுமான ஓ. ராஜகோபால் வாக்குமூலம் ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“தேர்தல் சமயத்தில் குறிப்பிட்டசில தொகுதியில் ரகசிய கூட்டணிஅமைப்பது கட்சிகளின் வழக்கம் தான். பாஜக சில தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும், பாஜகவேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் பரஸ்பரம் சில இணைக்கமான நடவடிக்கைகளை எடுத்துள் ளோம். இது வெளிப்படையானது தான். இதனைக் கூட்டணியாகக் கருத முடியாது. வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டுமே ஆகும். இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தியுள்ளோம். இந்த தந்திரம், கடந்தகாலத் தேர்தல்களில் ஒத்தபாலம் மற்றும் மஞ் சேஸ்வரம் தொகுதிகளில் பாஜக-வுக்கு பலன் கொடுத்துள்ளது. இடதுசாரி கூட்டணி அங்கு தோல்வி அடைந்துள்ளது” என்று குறிப்பிட் டுள்ளார்.

;