கொல்கத்தா:
நந்திகிராமில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியைத் தோற்கடிக்கத் தனக்கு உதவுமாறு, பிரலாய் பால் என்ற மற்றொரு பாஜகதலைவரிடம் முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் கெஞ்சிய ஆடியோ ஒன்றுசில நாட்களுக்கு முன்பு வெளியானது.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியின் நிலை அவ்வளவு மோசமாக உள்ளதா?என்று இந்த ஆடியோ விவாதங்களைக் கிளப்பிய நிலையில், மம்தா பானர்ஜி அதுபற்றி பதில் எதுவும் கூறாமல் வாய்மூடி மவுனியாக இருந்து வந்தார்.இதனிடையே முதன்முறையாக நந்திகிராம் பாஜக தலைவரிடம் பேசியதை மம்தாபானர்ஜி ஒப்புக் கொண்டுள்ளார்.“யாரோ ஒருவர் என்னுடன் பேச விரும்புகிறார்கள் என தகவல் கிடைத்தது. எனவே, நந்திகிராமில் உள்ள பாஜக தலைவரை தொலைபேசியில் அழைத்தேன். அவரதுஉடல்நிலையை பார்த்துக் கொள்ளுமாறு கூறினேன். தொகுதியின் வேட்பாளராக, எந்தவொரு வாக்காளரின் உதவியையும் நான் பெறலாம். நான் யாருக்கு வேண்டுமானாலும் அழைப்பு விடுக்கலாம். இதில் எந்த தவறும் இல்லை. மாறாக, இந்த தொலைபேசி உரையாடலை பொதுவெளியில் பரப்புவதுதான் குற்றம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மம்தாபானர்ஜி கூறியுள்ளார்.