கீழ்வேளூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலியை ஆதரித்து திங்களன்று மாலை நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது வேட்பாளர் நாகை மாலியின் கைகளை உயர்த்தி வாழ்த்து தெரிவித்து வாக்குகள் கேட்டார். உடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்.