election-2019

மதுரைச் சித்திரைத் திருவிழாவும்… தேர்தல் முத்திரைத் திருவிழாவும்…

மீனாட்சி மணக்கோலம் மதுரை நகரிலே…

மாலவனாம் கள்ளழகர் வைகை நதியிலே…

வானளந்த தமிழ்நகரில் சித்திரை விழா!

வாக்களிக்க வேண்டும் தேர்தல் முத்திரைவிழா!

வைகையிலே நீர்வரணும்! மகிழ்ச்சி பொங்கணும்! 

வாகைசூடி வெங்கடேசன் சேவை செய்யணும்!

கைகள் கூப்பி வணங்குகிறோம் மதுரை மக்களே!

‘‘காவல் கோட்டம்’’ உங்களுக்கு வெங்கடேசனே.!

கோவில்களில் நடராஜர் தாண்டவக் காட்சி…

கோவை எங்கும் நடராஜன் சேவைகள் சாட்சி….

தாயைப்போலத் தூயத்தொண்டு செய்வார் உமக்கு…

தரவேண்டும் கோவைமக்கள் வெற்றி அவருக்கு…!

தொழில்நகரம் கோவையிலே தொழில்கள் வளரணும்!

துயரில்வாடும் இளைஞருக்கு வேலை கிடைக்கணும்!

தொழிலாளர், ஏழை மக்கள் வாழ்வு உயரணும்!

‘‘செங்கொடிக்கே வெற்றி!’’ என்று கீதம் முழங்கணும்…!

மோசம் செய்து வேசம் போடும் ஊழல் கூட்டணி…

மோடிஎடப் பாடி எல்லாம் தோற்று ஓடணும்! 

தேசம் காக்கும் மதச்சார்பற்ற முற்போக்(கு) அணியே! 

தேர்தலிலே வெற்றிபெறணும்! எழுக மக்களே…!


;