election-2019

img

பொது மக்கள் உஷார் உஷார்

1. 2015 செப்டம்பர் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி கிராமத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற பெயரில் முகமது அக்லக் மற்றும் அவரது மகன் இந்துத்துவ கும்பலால் அவரது வீட்டில் வைத்தே அடித்துக் கொல்லப்பட்டனர். அவர் வைத்திருந்தது மாட்டுக்கறி அல்ல, ஆட்டுக்கறி என்று பின்னர் நிரூபணமானது, குற்றம் சாட்டப்பட்டு பிணையில் வெளிவந்த குற்றவாளிகள் 15 பேருக்கு உள்ளூர் பி.ஜே.பி, தலைவர்கள் ‘அரும்பாடுபட்டு’ பொதுத்துறை நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் கம்பெனியில் வேலை வாங்கித் தந்துள்ளனர்.


2. 2016 ஜூலை 11 அன்று குஜராத் மாநிலம் உனா நகருக்கு அருகாமையில் உள்ள கிராமத்தில் மாட்டுத் தோலை உரித்தார்கள் என்ற பெயரில் பாலு சர்வையா என்ற தலித்தை வீடு புகுந்து தாக்கியதோடல்லாமல் அவர்களில் நான்கு பேரை உனா நகருக்கு இழுத்து வந்து மக்கள் முன்னிலையில் சட்டை கழற்றப்பட்டு பட்டப்பகலில் தடிக்கம்பால் கடுமையாக தாக்கப்பட்டதோடல்லாமல் அதனை இணையத்திலும் பதிவிட்டனர்.


3. 2017 மார்ச் 17 ஜார்க்கண்ட் மாநிலம் ஜாபர் கிராமத்தைச் சேர்ந்த, மாட்டுச்சந்தையில் மாடு விற்க வந்த மஸ்லூம் அன்சாரி (32 வயது) மற்றும் இம்தியாஸ் கான் (13 வயது) ஆகியோர் கொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் மரத்தில் தொங்கவிடப் பட்டிருந்தன.


4. 2017 ஜூன் 29 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் அலிமுதின் என்ற அஸ்கர் அலி மாட்டிறைச்சி எடுத்துச் சென்றார் என்று பஜ்ரங்தளம் மற்றும் பி.ஜே.பி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இக்குற்றத்தில் தண்டிக்கப்பட்ட 8 பேர் பிணையில் வந்த போது மோடி அரசின் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை அணிவித்து வரவேற்றார்.


5. ஜனவரி 2018ல் ஜம்மு-காஷ்மீர் கத்துவா கிராமத்தில் 8 வயது ஆஷிபா பானு என்ற 

சிறுமியை கோவிலில் அடைத்து வைத்து மயக்க மருந்து கொடுத்து கும்பலாக பாலியல் வல்லுறவு செய்து பின்னர் அக்குழந்தையை கொன்றுள்ளனர்.

இக்குற்றங்கள் அனைத்தும் நடைபெற்றது பி.ஜே.பி. ஆளுகின்ற மாநிலங்களாகும்.

இவை தவிர கல்புர்கி, கோவிந்த் பன்சாரே,நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் ஆகி யோர் இந்து வெறியர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இன்று தங்களை காவலாளிகள் (சௌகிதார்) எனக் கூறிக் கொள்ளும் இவர்கள்

யாருக்கு காவலாளிகளாக இருந்தனர் என்பது ஊரறிந்த ரகசியம். 

இவர்களை தேர்ந்தெடுத்ததைத் தவிர எக்குற்றமும் செய்யாத மக்களே, ‘காவ லாளிகள்’ வருகிறார்கள். உஷார்! உஷார்!! 



- ரமணி

;