வெள்ளி, மார்ச் 5, 2021

election-2019

img

திண்டுக்கல் அலப்பறைகள் கடைசி வரை மாம்பழம் கிடைக்கவே இல்லை

அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்  பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து கோபால்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது பாமக தொண்டர் ஒருவர் பாமகவின் சின்னமாகிய மாம்பழங்களை வேட்பாளர் ஜோதி முத்துவிடம் கொடுத்தார். வனத்துறை அமைச்சர் சீனிவாசன், வேட்பாளரிடமிருந்து மாங்கனியை வாங்கி, தனது கையில் வைத்துக்கொண்டு, மாம்பழம் சின்னத்திற்கு விளம்பர மாடல் போல கூட்டம் முடியும் வரை வைத்திருந்தார். முன்னதாக ராமதாஸ் மாம்பழ சின்னத்தை அறிமுகம் செய்ய, வனத்துறை அமைச்சரிடமிருந்து ஒரு மாம்பழத்தை வாங்கி அறிமுகம் செய்தார். பின்னர் ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது கையில் இருந்த மாம்பழத்தை மீண்டும் வனத்துறை அமைச்சர் பறித்துக் கொண்டார். கூட்டம் முடிந்தவுடன் அந்த இரண்டு மாம்பழத்தையும் தனது பணியாட்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டார். கடைசி வரை மாம்பழம் பாமக வேட்பாளருக்கு கிடைக்கவே இல்லை.

(நநி)

;