திங்கள், மார்ச் 1, 2021

election-2019

img

சேலம் மாநகர மேற்கு பகுதிகளில்

சேலம், ஏப்.2-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாநகர மேற்கு பகுதிகளில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ் ஆர் பார்த்திபன் போட்டியிடுகிறர். இந்நிலையில், செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக சேலம் மாநகர மேற்கு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டர். சேலம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சிபிஎம் தாலுகா செயலாளர் சுந்தரம் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.மேலும், அரியாகவுண்டம்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சந்திரன், டி.பாலகிருஷ்ணன், ஐ.ஞானசௌந்தரி, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

;