தமிழ்நாடு வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Forest Watcher
மொத்த காலியிடங்கள்: 564
காலியிடப் பகிர்வு: (UR-144, BC-123, BCM-16, MBC/ DC-93, SC-70, SCA-14, ST-104)
சம்பள விகிதம்: ரூ.16,600 - 52,400
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் சலுகை வழங்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்கள் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதித் தேர்வு:
உயரம்: ஆண்கள்: 163 செ.மீ. (ST/ மலைவாழ் மக்கள்: 152 செ.மீ.)
பெண்கள்/ திருநங்கைகள்: 150 செ.மீ. (ST/ மலைவாழ் மக்கள்: 145 செ.மீ.)
மார்பளவு: ஆண்கள்: 79 செ.மீ.மார்பளவில் 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள்/ திருநங்கைகள்: 74 செ.மீ.
உடற்திறன் தேர்வு:
ஆண்கள்: 4 மணி நேரத்திற்குள் 25 கி.மீ. தூரத்தை நடந்து முடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள்/ திருநங்கைகள்: 4 மணி நேரத்திற்குள் 16 கி.மீ. தூரத்தை நடந்து முடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு, உடற் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பின் போது சாதி சான்றிதழ் சமர்ப்பிக்காத திருநங்கைகள் MBC பிரிவினர்களாக கருதப்படுவர். மேலும் தமிழ்நாடு திருநங்கை நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வில் General Knowledge பாடப்பிரிவிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் கேள்விகள் கேட்கப்படும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.forests.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.8.2019.