சென்னை
இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவியில் 500 காலியிடங்களும் கணக்கீட்டாளர் பதவியில் 1,300 காலியிடங்களும் உள்ளன. இந்த பதவிகளுக்கு தமிழ்வழியிலும் ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்படும் என்றும் இத்தேர்வுக்கு மார்ச் 23-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் திடீரென அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் மட்டுமே தேர்வை நடத்த வாலிபர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.