economics

img

செப்டம்பர் மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் 26% அதிகரிப்பு

செப்டம்பர் மாதத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்டி) வசூல் 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தின் ஜி.எஸ்.டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து 1,47,686 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்த ஜி.எஸ்.டி வசூலில் 25,271 கோடி ரூபாய் மத்திய ஜி.எஸ்.டியும் (CGST), 31,813 கோடி ரூபாய் மாநில ஜி.எஸ்.டியும் (SGST)வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒருங்கிணைக்கப்பட்ட ஐ.ஜி.எஸ்.டி ரூ.80,464 கோடியாகும். மேலும் செஸ் வரியாக ரூ.10,137 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

;