economics

img

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! - ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 6.5% ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டம் கடந்த அக்டோபர் 7 தேதி தொடங்கி அக்டோபர் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் கடைசி நாளான இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 6.5% ஆகவே தொடரும் என்று தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து 10ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே நீடிக்கிறது. 
நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 4.5% ஆக இருக்கும் என்றும் ஜிடிபி 7.2% ஆக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.