economics

img

லட்சுமி விலாஸ் - டிபிஎஸ் வங்கி இணைப்பில் மாபெரும் ஊழல்? ரிசர்வ் வங்கி ஆளுநரை பதவியிலிருந்து நீக்கி, சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும்.... பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியசாமி கடிதம்....

 புதுதில்லி:
லட்சுமி விலாஸ் வங்கி (LakshmiVilas Bank - LVB) மற்றும் டிபிஎஸ்(Development Bank of Singapore- DBS) வங்கி இணைப்பில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாகபாஜக எம்.பி.யான சுப்பிரமணியசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்த ஊழலை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மேலும் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் கரூரை மையமாகக் கொண்ட லட்சுமி விலாஸ் வங்கி(எல்விபி), சிங்கப்பூரின் டிபிஎஸ்வங்கியைக் காட்டிலும், 20 மடங்குஅதிகமான வங்கி செயல்பாடுகளைக் கொண்டதாகும். 100 ஆண்டுப் பழமையான இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 550 கிளைகள் உள்ளன. ஏழைகள் மற்றும் வங்கி சாராமக்கள் நலனை முன்வைத்து இந்தவங்கி சேவை செய்து வருகிறது.இந்நிலையில், நவம்பர் 17 அன்றுஎல்விபி வங்கியை, டிபிஎஸ் வங்கியுடன் இணைத்த இந்திய ரிசர்வ் வங்கியானது, எல்விபி வங்கியின் அனைத்துச் சொத்துக்களையும் டிபிஎஸ் வங்கிக்கு மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறு மாற்றப்படும் போது, டிபிஎஸ் வங்கியின் முதலீடு மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருப்பதுடன், எல்விபி அளித்துள்ள அனைத்து பங்குகள் மற்றும் பாண்டுகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது ஒரு ஊழல் போலத் தெரிகிறது. சொல்லப்போனால், 2 ஜிஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இணையானஒன்றாகத் தெரிகிறது. ஏனெனில், ரிசர்வ் வங்கி எந்தவொரு நடைமுறைகளையும் பின்பற்றாமல், எல்விபி வங்கி பங்குதாரர்களின் எதிர்ப்பையும் கொள்ளாமல் இந்த வங்கிகள் இணைப்பு முடிவைஎடுத்துள்ளது. குறிப்பாக, வங்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட 72 மணிநேரத்திற்குள் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு இருப்பது அதிசயமாக உள்ளது.வங்கிகளை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கிக்கு அதிக பொறுப்புள் ளது. அனைத்து தேசிய மற்றும்தனியார் வங்கிகளின் நிர்வாகத்திலும், ரிசர்வ் வங்கி ஒரு உறுப்பினராகப் பங்கேற்றுள்ளது. இதனால், எல்விபி தவறாக இயங்கியதில் ரிசர்வ் வங்கிக்கும் பொறுப்புள்ளது.

எனவே, எல்விபி-யை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் குறித்து,ஒரு தணிக்கை நடத்தப்பட வேண் டும். தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் மீது, அவர் தமிழகத்தில் பணிபுரிந்த போது ஊழல் குற்றச் சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. டிபிஎஸ் வங்கியும், இந்தியா மற்றும் அதன்தாயகமான சிங்கப்பூரில் பணமோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே, டிபிஎஸ் வங்கியின் பணமோசடி குற்றங்கள் குறித்து அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டும். எல்விபி - டிபிஎஸ் வங்கிகள் இணைப்பில் ரிசர்வ் வங்கி எடுத்த முடிவுகள் குறித்து, சிபிஐ விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறிய வேண்டும். அரசின் முக்கிய கடமைகளில் ரிசர்வ் வங்கியின் நேர்மையான செயல்பாடு முக்கியமானதாகும். எனவே, தற்போதைய ரிசர்வ் வங்கிஆளுநரை இந்த விசாரணை முடியும்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.ரிசர்வ் வங்கி ஆணையம் மற்றும் ஆலோசகர் குழுவையும் மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.