economics

img

ஜிடிபி விகிதத்தை 9.3 சதவிகிதமாக குறைத்தது மூடிஸ்....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றுப்பாதிப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில், அது தொழில் பாதிப்பு, வேலை -வருவாய் இழப்பு என்று நாட்டின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளதால், சர்வதேச பொருளாதார தரமதிப்பீட்டு நிறுவனங்கள் பலவும், இந்தியாவின் ஜிடிபி மதிப்பு கணிப்பைக் குறைக்க ஆரம்பித்துள்ளன.

அண்மையில், ‘எஸ் & பி குளோபல்ரேட்டிங்ஸ்’, 2021-22 நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபிகணிப்பை வெகுவாக குறைத்தது. அதைத்தொடர்ந்து தற்போது,‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ அமைப்பும், நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி கணிப்பை 13.7 சதவிகிதத்தில் இருந்து, 9.3 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.இதே ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ அமைப்புதான், கடந்தபிப்ரவரியில்இந்தியப் பொருளாதாரம் நடப்பு ‘ஏப்ரல் 2021 முதல்மார்ச் 2022’ வரையிலான நிதியாண்டில் 13.7 சதவிகிதம் வளர்ச்சிஅடையும் என்று கணித்திருந்தது. தற்போது அதைக் குறைத்துள்ளது.அத்துடன், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல தடைகள் உள்ளதாகக் கூறி ‘Baa3’ என்ற ரேட்டிங்-கையும் இந்தியாவுக்கு மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு கொடுத்துள்ளது. அதீதக் கடன், மோசமான நிதியியல் அமைப்பு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என ‘மூடிஸ்’ தெரிவித்துள்ளது. 

‘எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ்’, மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நிறுவனங்களைப் போல, ‘நோமுரா’ 12.6 சதவிகிதத்தில் இருந்து, 10.8 சதவிகிதமாகவும், ஜேபி மார்கன் 13 சதவிகிதத்தில் இருந்து 11 சதவிகிதமாகவும், யுபிஎஸ் 11.5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகவும், இந்தியாவுக்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பைக்குறைத்துள்ளன.