economics

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக குறையும்: உலக வங்கி கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2022-2023-ஆம் நிதியாண்டில் 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இது அதன் முந்தையை ஜூன் 2022 கணிப்புகளை விட 1 சதவிகிதம் குறைவு என்றும், இதற்கு சர்வதேச சூழல் மோசமடைந்து வருவதே காரணம் எனவும் உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசிய நாணயம் நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டத்திற்கு முன்னதாக வியாழக்கிழமை தெற்காசிய பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் மாத வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1 சதவிகிதம் குறைந்து 6.5 சதவிகிதமாக கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சூழல் மோசமடைந்து வருவதும், நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிக நிதித் செலவுகளால் தனியார் முதலீட்டு வளர்ச்சியானது குறைய வாய்ப்புள்ளதன் காரணமாக, நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து அறிவித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.