districts

img

விருதுநகர் அரசு மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்கக் கோரி சிபிஎம் போராட்டம்

விருதுநகர், ஜூன் 23- விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைவில் முடித்து பொது மக்களின்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கண்டன முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் கடந்த 2020 மார்ச் 1இல்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.380 கோடியில் கட்ட அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது. 18 மாதங்களில் இப்பணிகள் நிறைவடையும் எனக் கூறப்பட்டது. தற்போது மருதுதுவக் கல்லூரியானது 4 வழிச்சாலையில் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவமனை  கட்டிடப் பணிகள் தற்போது வரை நிறை வடையவில்லை. இதனால், நோயாளி கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். எனவே, கட்டிடப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் எனவும், கடந்த ஆட்சியில், விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர் கள் பணியில் உள்ளனர். ஆனால், ஆய்  வகங்களில் வெறும் 7 பேர் மட்டுமே பணி யில் உள்ளனர். இதனால், இரத்தம், நீர்  உள்ளிட்ட பரிசோதனை செய்திட ஏராள மான நோயாளிகள் வரிசையில் காத்தி ருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆய்வகங்களில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். பாரா மெடிக்கல் கல்லூரி, பிஎஸ்.சி நர்சிங் கல்லூரிகளை அமைக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதேபோல், கூடுதலான எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன்  மையங்களை அமைத்து நோயாளி களுக்கு உடனுக்குடன் பரிசோதனை அறிக்கைகளை வழங்க வேண்டும். மேலும், மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக உள் நோயா ளிகளாக ஏராளமானோர் சேர்கின்றனர். அவர்களுக்கு முதலமைச்சரின் காப்  பீட்டுத் திட்டத்தின் மூலும் சிகிச்சைக் கான பணம் கிடைப்பதற்கு 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை காலதாமதம் ஆகிறது. இதனால், நோயாளிகள் மிக வும் பாதிக்கப்படுகின்றனர். பலர் தனி யார் மருத்துவமனைகளுக்கு செல்லும்  நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனுக்  குடன் காப்பீட்டுத் திட்ட பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விருதுநகர் நகராட்சி நிர்வா கம், மருத்துவமனைக்கு நாள்தோறும் தேவையான 10 லட்சம் லிட்டர் குடிநீரை  வழங்க வேண்டும். நாள்தோறும் குப்பை களை அகற்ற வேண்டும் எனவும், சக்கர நாற்காலி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை உடனடியாக வழங்க  வேண்டும். மருத்துவக் கல்லூரி முதல்வர் விருதுநகரில் தங்கியிருந்து பணிகளை செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்  பில் கோரிக்கை முழக்கம் எழுப்பப் பட்டது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு நகர்குழு உறுப்பினர் வி.சரவணன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் ஜி. மனோகரன், புஷ்பராஜ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கோரிக்கை களை விளக்கி மூத்த தலைவர்கள் எஸ். பாலசுப்பிரமணியன், தேனிவசந்தன், நகர் குழு செயலாளர் எல்.முருகன் ஆகி யோர் பேசினர். மேலும் இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜெய பாரத், நகர்குழு உறுப்பினர்கள் பி.ராஜா, ஐ.ஜெயா உட்பட பலர் பங்கேற்றனர்.

;