districts

img

கதிரறுக்கும் இயந்திரத்தில் சிக்கி கையை இழந்த இளைஞருக்கு நிதியுதவி

சிவகங்கை, மார்ச் 23- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரில்  வசிப்பவர் நாராயணன் மகன் லட்சுமணன் (வயது 22) கூலி  வேலை செய்பவர். இவர் கதிர் அறுக்கும் இயந்திரத்தில் பணி செய்யும்  போது அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கியது. இதில்  படுகாயம் அடைந்த நிலையில், அவரது வலது கை அகற்றப்பட்டுள்ளது.  இந்நிலையில் மதுரா பவுண்டேஷன் அமைப்பின் மூலம் லட்சுமணனுக்கு ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் வாழ்  வாதார நிதியாக வழங்கப்பட்டது. பவுண்டேஷன் பொறுப்  பாளர்கள் பாண்டியன் ,சுரேஷ் குமார், சின்ன குருசாமி, கன்னியப்பன், திருமுருகன் ,நாகராஜன் ஆகியோர் இளை ஞருக்கு நிதியை வழங்கினர்.  இதில் ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் உற வினர்கள் கலந்து கொண்டனர் .பணத்தைப் பெற்றுக் கொண்ட லட்சுமணன் மதுரா பவுண்டேஷனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மதுரா பவுன்டேசன் பொறுப்பாளர்கள் கூறுகையில், கோவில்பட்டியில் கைகளை இழந்தவர்க்கு உதவினோம்.அவர் நன்கு உள்ளார். அவர் இந்த இளைஞர் லெட்சு மணனுக்கு பணம் கொடுத்து உதவியிருக்கிறார்.மேலும்  பல உதவிகள் செய்துள்ளோம்.பல்வேறு நண்பர்கள் பங்க ளிப்போடு மதுரா அறக்கட்டளை செயல்படுகிறது என்று  தெரிவித்தனர்.