districts

மதுரை முக்கிய செய்திகள்

மனிதர்களை தாக்கும் புலியை  பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகை, செப்.24- மனிதர்களை தாக்கும் புலியை கூண்டு  வைத்து பிடிக்க வேண்டும் என தேவர்சோலை பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், தேவர்சோலை, தேவன் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சந்திரன் (52) தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகி றார். இவர், வெள்ளியன்று காலை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, புதரில் மறைந் திருந்த புலி திடீரென இவரை தாக்கியது. கழுத்து பகுதியில் படுகாயமடைந்த இவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் உடனடியாக புலியை துரத்தி சந்திரனை மீட்டனர். இதன்பின்னர் கூடலூர் அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், கடந்த சில நாட்களாக கூடலூர் சுற்றுப் புற பகுதிகளில் ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 4 வளர்ப்பு கால்நடை களை புலி அடித்து கொன்றுள்ளது.  ஆகவே, இந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக் கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத் தில் ஈடுபட்டனர். அதன்பின், கூண்டு வைத்து  புலி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், கால்நடைகளை வேட்டையாடி வந்த புலியானது, தற்போது மனிதர்களை தாக்கியுள்ளது. எனவே, புலியை விரைந்து பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவேசமாக தெரி வித்தனர்.

ஏற்காடு: மலைப்பாதையில் மண்சரிவு

சேலம், செப்.24-  ஏற்காட்டில் பெய்த கன மழையின் காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காட் டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த  மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வியாழனன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த மழையால் மலைப் பாதைகளில் ஆங்காங்கே மழை நீர் ஆறுபோல் பெருக் கெடுத்து ஓடியது. மேலும், ஏற்காட்டில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் 60 அடி பாலம் அருகே ராட்சத பாறை ஒன்று உருண்டு சாலையில் விழுந்தது. இது குறித்து தகவலறிந்து விரைந்து  வந்த நெடுஞ்சாலை துறையி னர் பாறையை உடைத்து அகற்றினர்.

சேலத்தில் பாரம்பரிய  ஆடை கண்காட்சி

சேலம், செப்.24- சேலத்தில் பாரம்பரிய ஆடை கண்காட்சி வியாழ னன்று துவங்கியது. சேலம் 5 ரோடு அருகே உள்ள சிஜே பலேசியா விடு தியில், ஸ்டைல் பஜார் இந் திய பாரம்பரிய ஆடைகள் கண்காட்சி சேலத்தில் தொடங் கியது. இதில், மும்பை, ராஜஸ் தான், ஜெய்ப்பூர், தில்லி, கர் நாடகா, காஷ்மீர், லக்னோ உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்க ளில் கைத்தறியில் நெய்யப் பட்ட துணி வகைகளையும், இந்திய பாரம்பரிய உடைகள் மற்றும் உலோகங்களால் ஆன ஆடைகள் வடிவ மைக்கப்பட்டு உள்ளது. மேலும், உலோகங்களால் ஆன காதணிகள், கை வளை யல்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்காக வைக்கப் பட்டுள்ளது.

;