districts

img

முதல்வர் பிறந்தநாள் விழா, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

சிவகங்கை, மார்ச் 27- சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள சண்முகராஜா கலையரங்கில் நகர் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நகரச் செயலாளர் மற்றும் நகர்மன்ற தலைவருமான துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.  இதில் கழக அமைப்பு செயலாளரும் மாநிலங்க ளவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, மாவட்டச் செயலாளரும் கூட்டுறவு துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் ஆகியோர் பேசினர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழைகளுக்கு பல்வேறு உதவி களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.