மதுரை, மார்ச் 2- சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆவின் பணியாளர் களை நீதிமன்ற உத்தரவுப்படி மீண் டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங் கம் (சிஐடியு) சார்பில் மதுரையில் வியாழனன்று ஆட்சியர் அலுவல கம் அருகே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொதுச் செயலாளர் இரா.லெனின் தலைமை வகித்தார். மு.துரைச் சாமி, மணிவேல், பி.கே.செல்வ ராஜ், ரமேஷ்பாபு, மோசஸ் காந்தி, பழனிக்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ், சிவ பெருமாள், அசோக்குமார்- பாதிக் கப்பட்ட ஆண்,பெண் ஊழியர்கள் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணை யத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுரை, தேனி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், நாமக் கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் கடந்த 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் விதி களுக்குட்பட்டு மேலாளர், துணை மேலாளர், டெக்னீசியன், எக்ஸ்கியூ டிவ் மற்றும் முதுநிலை ஆலை உத வியாளர் என பல பதவிகளில் மொத் தம்-201 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 47 பணியாளர்களும் அடங்குவர். இந்த 47 பணியாளர்களையும் எவ்வித முன்னறிவிப்புமின்றி, அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பு வழங்காமல் இயற்கை நியதிக்கு முரணாக பணி நீக்கம் செய்து மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியப் பொது மேலாளர் ஜனவரி 4-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். பொதுமேலாளரின் சட்டவிரோத மான உத்தரவுக்கு எதிராக பணி யாளர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து மேற்படி பணிநீக்க ஆணைக்குத் தடையாணை பெற்றுள்ளனர். தடையாணை பெற்றுள்ள பணியா ளர்கள் மீண்டும் பணியில் சேரச் சென்றபோது மதுரை ஆவின் நிர்வா கம் அவர்களைப் பணியில் சேர அனுமதிக்கவில்லை. சென்னை பால் வளத்துறை ஆணையாளர் அலுவலகத்திற்குச் சென்று அவரி டம் முறையிட்டுள்ளனர். அதன்பிற கும் தீர்வு கிடைக்கவில்லை. மறு முறை அவர் பணியாளர்களைச் சந்திக்க மறுத்து அலைக்ககழித் துள்ளார். சட்டத்தை மதித்து செயல் படுவதில் மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண் டிய, தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனமே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுப்பது ஒரு மோச மான முன்னுதாரணமாகும். பணியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பணியின் மீது நம்பிக்கை கொண்டு திருமணம் செய்து வீட்டு கடன், வாகன கடன் என பெற்று வாழ்வை நடத்தி வந்த தொழிலா ளர்களை ஒரு நாளின் தொடக்கத் தில் திடீரென வேலையை பறித்து வீட்டுக்குப் போ என்று சொல்லும் நடவடிக்கை மிகக் கொடுமையான தொழிலாளர் விரோத நடவடிக்கை ஆகும். தொழிலாளர்கள் குடும்பத் தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றமுடியாமலும், வாங் கிய கடனுக்கு மாத தவணை செலுத்த முடியாமலும் சொல்லொ ண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ள னர் என்று தெரிவித்தார்.