பெரம்பலூர், டிச.24- கீழ வெண்மணி வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக, பெண்கள், மாணவி கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தியும், கல்வி நிலையங் களில் சாதிய மதவாத கருத்துகளை புகுத்து வதற்கு எதிராக நடைபெறும் கருத்தரங்கில், செஞ்சட்டை பேரணியில் கலந்து கொள்வ தற்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் புறப்பட்டனர். மாநில துணைத் தலைவர் சரவணன், மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகி யோர் தலைமையில் 25 மாணவர்கள் சனிக் கிழமை (டிச.24) பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, கீழ் வெண்மணிக்கு புறப்பட்டனர். மாணவர்களை சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.அகஸ்டின் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் எம்.கருணாநிதி, மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பினர்.