புதுக்கோட்டை, ஜன.5- புதுக்கோட்டை மாவட் டம் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில், சூரிய ஒளி மின் உற் பத்தி மையத்தினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வியா ழனன்று துவக்கி வைத்தார். விழாவில் ஆட்சியர் பேசு கையில், ‘‘இலுப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் அலுவ லகத்தில், சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக் கப்பட்டுள்ளது. இம்மையத் தின் மூலம் நாள் ஒன்றுக்கு 23 யூனிட் மின்சாரம் உற் பத்தி செய்து, அலுவலகப் பயன்பாட்டிற்கு பயன்படுத் தப்பட உள்ளது. மேலும் அலு வலகத்திற்கு மின்சார அள வின் தேவை குறையும் பட்சத் தில், அலுவலக மின் இணைப்பு வாயிலாக மின்சாரம் மின் மாற்றிக்கு கடத்தப்பட்டு மாற்று மின்நுகர்வோர் களுக்கு பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவ்வமைப்பில் சூரிய ஒளியை உள்வாங்கி, அதிக மின்திறன் ஆற்றலை வெளி யேற்றக் கூடிய நவீன தொழில் நுட்பம் கொண்ட சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்பட் டுள்ளன. இதன்மூலம் உற் பத்தி செய்யப்படும் மின் ஆற்றல் முழுவதும் இயற்கை பேரிடர்கள் மற்றும் மின் சார தொழில்நுட்ப கோளாறு களின் போதும் தடையின்றி அலுவலகப் பணிகள் மேற் கொள்ளவும் வழிவகை செய் யப்பட்டுள்ளது’’ எனக் கூறி னார். நிகழ்வில், மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி, இலுப்பூர் வருவாய் கோட் டாட்சியர் குழந்தைசாமி, வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண் டனர்.