districts

பட்டியலினத்தவர் மீது கொலைவெறித் தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

அறந்தாங்கி, ஜூன் 7 - பட்டியலினத்தவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய வர்களை உடனே கைது செய்ய வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தி யுள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா விளாப்பட்டி அஞ்சல் நாங்குப்பட்டியை சேர்ந்த வர் விவசாயக் கூலி வேலை பார்த்து  வரும் கருப்பையா மகன் செல்லக் கண்ணு. இவர் எஸ்.நாங்குப்பட்டி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து  வருகிறார். இவருக்கு திருமண மாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.  பட்டியலினத்தை சேர்ந்த இவர்,  கடந்த மே 24 அன்று எஸ்.நாங்குப் பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்  திருவிழாவிற்கு மனைவி ரத்தின குமாரி, அவரது தம்பி வீரமணி, ஆனந்த் மற்றும் அவரது மனைவி கண்ணம்மாள், உமாமகேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் டாடா  ஏசி வாகனத்தில் சென்று ஸ்ரீமகமாயி  என்னும் நாடகம் பார்த்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த சாதி ஆதிக்க வெறி யர்களான கனகராஜ், அவரது  தம்பி நடராஜன், அஜித்குமார், மேற் கித்திய பண்ணையைச் சேர்ந்த கோகுல், பிலிப்பட்டியை சேர்ந்த ஹரிகரன், துலுக்கபட்டியை சேர்ந்த பாரதி, பாக்குடி விஜி.சேகர்,  கோபால், தீபன், புஷ்பராஜ் ஆகிய  10 பேர் மற்றும் சிலர், நாடகம் பார்த்து  கொண்டிருந்த செல்லக்கண்ணு உறவினரான பாலா என்பவரை பார்த்து ‘என்னடா பயலுகளா சவுண்டு விடுற’ என்று அசிங்கமாக திட்டியிருக்கிறார்.  அப்போது செல்லக்கண்ணு வுடன் இருந்த அவரது தம்பி ஆனந்த், பிரச்சனை வேண்டாம் என்று டாடா ஏசி வாகனத்தில் வீட் டிற்கு கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் செல்வதை பார்த்த சாதி  வெறிய கும்பல், அவர்களை பின் தொடர்ந்துள்ளனர்.

 செல்லக்கண்ணு உறவி னர்கள் வீட்டிற்கு வந்ததும், பின்தொ டர்ந்து வந்தவர்கள் அங்கு கிடந்த  கற்களை எடுத்து செல்லக்கண்ணு குடும்பத்தினர் மீது வீசியிருக்கிறார் கள். இதில் அவர்கள் காயமின்றி தப்பித்த நிலையில், வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அப்போது கனகராஜ், அவரது தம்பி  நடராஜன், அஜித்குமார் ஆகியோர்,  கம்பி மற்றும் கற்களுடன் செல்லக் கண்ணுவை நோக்கி, “எங்க கிட்டேயே பிரச்சனை பண்ணுவியா”  என்று மிகவும் தகாத வார்த்தை களால் பேசி செல்லக்கண்ணுவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில்  செல்லக்கண்ணுவின் மூக்கில் ரத்த  காயம் ஏற்பட்டுள்ளது.  இதை பார்த்த செல்லக்கண்ணு வின் பக்கத்து வீட்டார் பன்னீர் செல்வம், “எதுக்குடா இப்படி வீண்  பிரச்சனை செய்கிறீர்கள்” என்று  கேட்டிருக்கிறார். அதற்கு நடராஜன், “நீ என்ன பெரிய ஆளா” என கூறி,  தன் கையில் வைத்திருந்த இரும்பு  கம்பியால் அடித்ததில், பன்னீர்செல் வம் படுகாயம் அடைந்தார். மேலும்  சாதி ஆதிக்க வெறியர்களுடன்  வந்தவர்கள், செல்லக்கண்ணுவு டன் இருந்தவர்களையும் அடித் திருக்கிறார்கள். இதில் அடி தாங்க  முடியாமல் சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்திருக்கிறார்கள்.  இதை பார்த்த சாதி வெறிய கும்பல்,  ‘என்னைக்கு இருந்தாலும் உங்கள் சாவு எங்கள் கையில்தான்’ என்று மிரட்டிவிட்டு சென்றனர்.  இந்நிலையில் படுகாயமடைந்த செல்லக்கண்ணுவும் பன்னீர்செல்வ மும் புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று  வருகின்றனர். சிகிச்சை பெறுபவர் களிடம் அன்னவாசல் போலீசார் விசாரித்து வழக்குப் பதிந்தனர். ஆனால் இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வில்லை. தாக்குதல் நடத்திய வர்களை உடனே கைது செய்ய  வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

;