districts

img

சமுதாய வளைகாப்பு விழா: எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்பு

புதுக்கோட்டை, நவ.11 - குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் நடைபெற்ற சமுதாய வளை காப்பு விழாவில் எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்றார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான சமுதாய வளைகாப்பு விழா கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரேவதி தலைமை வகித்தார்.  கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சிறப்பு ரையாற்றினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நா.ஸ்டாலின், வட்டார மருத்துவ  அலுவலர் மணிமாறன், வித்யா விகாஸ் பள்ளி  முதல்வர் வெண்ணிலா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா ராமசாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

;