புதுக்கோட்டை, அக்.19 - புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கத் தில் நடைபெற்று வந்த 7 ஆவது உலகத் திரைப் பட விழா செவ்வாய்க்கிழமை எழுச்சியுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் 7 ஆவது உலகத் திரைப்பட விழா அக்.14 முதல் அக்.18 வரை புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கத் தில் நடைபெற்றது. 5 நாட்களும் 11 நாடு களைச் சேர்ந்த 23 திரைப்படங்கள் திரையிடப் பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 500- க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்ற னர். ஒவ்வொரு நாளும் திரைப்பட இயக்கு நர்கள் சசி, பாண்டிராஜ், காளி வெங்கட், வினோத்ராஜ், பிரம்மா, தமிழ், எடிட்டர் லெனின், ஒளிப்பதிவாளர் விக்னேஷ் குமுளை ஆகியோருடன், எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், ஆர்.நீலா, ஓவியர் ஸ்ரீரசா, திரைக்கலைஞர் கா.பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமை வகித் தார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, ஜீவி, மருத்துவர் ஜெயராமன், கவிஞர் ரமா ராமநாதன் உள்ளிட்டோர் பேசி னர். விழாவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். விழாவில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் திரைப்படங்களை திரை யிட்டும், திரை ஆளுமைகளை அழைத்து வந்து விழா எடுத்தும், உலகத் திரைப்படங் கள் குறித்து ஏராளமான கட்டுரை நூல்களை எழுதியும் உலகத் திரைப்பட விழா குறித்து விசாலமான பார்வையை மக்களிடம் கொண்டு சென்றதற்காக புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ கவு ரவிக்கப்பட்டார். முன்னதாக மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் வரவேற்க, பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.