districts

தீயணைப்பு மீட்பு துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி

நீலகிரி, ஏப்.18-

மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறை யினர் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு மற்றும் ஓடைக ளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கன மழை பெய்யும் போது குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு உபகர ணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கன மழை  நேரங்களில் மரங்கள் விழுந்தால்,விபத்து ஏற்பட்டால் எவ் வாறு உபகரணங்களை பயன்படுத்தி மக்களை மீட்க வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

;