districts

நடப்பு கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல், ஜன.12- நடப்பு கல்வியாண்டில் புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், தொடர் அங்கீ காரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய  தொழிற்பிரிவுகள் துவங்குதல் ஆகிய வற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு (2021 -2022) கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் துவங்குதல் ஆகிய வற்றிற்கான அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப் பம் சமர்பித்தால் போதுமானது. என்இ எப்டி மூலம் தொழிற்பள்ளி பணம் செலுத்தும் போது தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம், ஆய்வு கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.    விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி நாளா கும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விவ ரங்களுக்கு www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சேலத்தில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவ லகத்தினை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

;