நாகர்கோவில், நவ.20- கன்னியாகுமரி மாவட் டத்தில் ஆன்மீகப் பணியுடன் மக்கள் பணி செய்த எம்.சேவி யர் ராஜாமணி அடிகளார் 16 ஆண்டு நினைவு நாள் கருத்த ரங்கம் ஞாயிறன்று (நவ.20) மார்த்தாண்டத்தில் நடை பெற்றது. மார்த்தாண்டம் மதில கத்தில் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையும், எம்.எக்ஸ்.ஆர் நினைவு கலை பண்பாட்டு மையமும் இணைந்து நடத்திய கருத்த ரங்கத்துக்கு அருட்பணி வ. ராபர்ட் அடிகளார் தலைமை வகித்தார். முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். லீமாறோஸ், எம்.கிறிசாந்து மேரி, எப்.ஜாண், பண்பாட்டு மைய நிர்வாகி கே.முரளீ தரன் உள்ளிட்டோர் பேசினர். கருத்தாளராக பங்கேற்ற கே. கனகராஜ் இந்திய அரசியல் சாசனத்தின் மீது தொடுக்கப் படும் தாக்குதல்கள் என்கிற தலைப்பில் பேசினார். இந் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.