districts

img

துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடங்களை கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், ஆக.5 - நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி கட்டிடத்தை திறந்து வைத்தார்.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல், வேளாங்கண்ணி, கீழையூர், கீழ்வேளூர், திருக்குவளை, நீர்முளை,  கரியாப்பட்டினம் ஆகிய இடங்களில் ரூ.2 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் துணை வேளாண் விரி வாக்க மைய கட்டிடம் புதிதாக கட்டப் பட்டது.  இதில் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், திருக்குவளை, கீழையூர் ஆகிய இடங்களில் துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பின்னர் ரூ.5 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக வேளாண் விரிவாக்க மைய கட்டி டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வும் நடைபெற்றது.  இந்நிகழ்வில் மீன் வளர்ச்சி கழக  தலைவர் என்.கௌதமன், ஆதிதிராவிட நலத்துறை தலைவர் உ.மதிவாணன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ், வேளாங் கண்ணி பேரூராட்சி துணைத் தலை வர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், திருக்கு வளை ஊராட்சி மன்ற தலைவர் எல். பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்
வேதாரண்யத்தை அடுத்த கரியாப் பட்டினத்தில் வேளாண்மை பொறியி யல் துறை சார்பாக ரூ.38 லட்சம் செல வில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய கட்டி டத்தை, வேளாண்மை இணை இயக்கு நர் ஷாகுல ஆண்டராஜ் திறந்து வைத்தார்.

;